8th Pay Commission: நம் இந்திய நாட்டில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் இளைஞர்களே அதிகம் அளவு உள்ளனர். நம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு முக்கிய கனவாக உள்ளது அரசு வேலையை பெறுவதாகும். அதற்காக பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கான காரணம் அரசு வேலை நிலையானது மற்றும் அரசு வேலையின் மூலம் ஒரு நிலையான வருமானத்தை பெறலாம்.
தற்போது அரசாங்கத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் ஏழாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் தற்போது ஊதியத்தை பெற்று வருகின்றனர். எட்டாவது ஊதியக்குழு எப்போது அமல்படுத்தப்படும் என்ற ஆர்வத்திலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். நாம் இந்த கட்டுரையில் எட்டாவது ஊதியக்குழு பற்றி விரிவாக காண உள்ளோம்.

ஊதியக்குழு
முதல் முதலாக இந்த ஊதியக்குழு 1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஊதியக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் பணியாளர்களுக்கு ஊதியம் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க ஆகும். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இந்த ஊதிய குழுவின் மூலம் அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் அரசு பணியாளர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
ஏழாவது ஊதியக்குழுவானது 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. தற்போது பத்து ஆண்டை நெருங்கி வரும் சூழ்நிலையில் நாட்டின் வருவாயும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எட்டாவது ஊதியக்குழுவை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எட்டாவது ஊதியக்குழு
எட்டாவது ஊதிய குழுவை அமைக்க தற்போது 2024 ஆண்டில் திட்டமிட்டால் தான் அந்த ஊதியக்குழு அளிக்கும் பரிந்துரையை நடைமுறைக்கு கொண்டுவர ஒரு ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். இதன் காரணமாக ஏழாவது ஊதியக்குழு காட்டிலும் எட்டாவது ஊதிய குழுவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியம் பெருமளவில் மாற்றமடையும்.
தற்போது ஏழாவது ஊதிய குழுவின் அடிப்படையில் ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூபாய் 18,000 ஆக உள்ளது. எட்டாவது ஊதியக்குழுவானது நடைமுறைக்கு வந்தால் ஒரு அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூபாய் 26 ஆயிரம் ஆக மாற்றம் அடையும். இது அந்த அரசு ஊழியரின் சம்பளத்தில் 25 முதல் 35 சதவீதம் மாற்றத்தை கொண்டு வரும்.
எட்டாவது ஊதியக்குழு எப்பொழுது அமைக்கப்படும்
ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஊதியக்குழு அமைத்து அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு. 2016ஆம் ஆண்டு அமலுக்கு வந்த ஏழாவது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைய சில காலமே உள்ளது. தற்போது இதற்கான பணியை மேற்கொண்டால் மட்டுமே 2026 ஆம் ஆண்டு எட்டாவது ஊதிய குழுவை மத்திய அரசாங்கத்தால் அமல்படுத்த முடியும்.
இந்த எட்டாவது ஊதிய குழுவின் மூலம் ஒருவரின் அடிப்படை சம்பளம் 25 லிருந்து 35 சதவிதமாக மாறும். அதன் காரணமாக அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இந்த எட்டாவது புதிய குழுவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் மற்றும் இதற்கான எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர். இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.