ஆதார் கார்டு வச்சிருக்கவங்க கண்டிப்பாக இதை செஞ்சுருங்க! இல்லைனா உங்களுக்கு பிரச்சனை தான் – Aadhaar Card Address Correction Update 2024

Aadhaar Card Address Correction Update 2024: இந்தியாவில் முக்கிய ஆவணமாக கருதப்படுவது ஆதார் அட்டை ஆகும். பெரும்பான்மையான செயல்களுக்கு ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஓட்டு போடுவது, ரேஷன் கார்டு வாங்குவது, பள்ளியில் சேர்வது முதல் வேலைக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதுவது வரை ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஆதார் கார்டில் உள்ள தகவல்: 

இந்த ஆதார் கார்டில் எல்லா தகவலும் மிகச் சரியானதாக இருக்க வேண்டும். அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில் ஒருவர் இதனை கண்டிப்பாக சரி செய்து ஆக வேண்டும். ஆதார் கார்டில் உள்ள தகவலில் முக்கியமானது உங்களது முகவரி ஆகும். ஒருவர் தான் இருக்கும் இடத்தின் முகவரி ஆதார் கார்டில் பதிவு செய்திருப்பார். ஒருவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடி பெயர்ந்தால் கண்டிப்பாக அவர் ஆதார் கார்டில் தன்னுடைய முகவரி மாற்றி புதிய முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ளும் வசதி:

முன்னெல்லாம் ஆதார் சென்டருக்கு சென்று தான் இந்த பதிவை மேற்கொள்ள முடியும். ஆனால் தற்சமயம் உங்கள் வீட்டின் மின்சார பில்லை வைத்து நீங்கள் உங்கள் ஆதார் கார்டில் உள்ள முகவரியை ஆன்லைன் மூலமாக நீங்களாகவே மாற்றிக் கொள்ளும் வசதியை தற்சமயம் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதனைப் பற்றி நாம் விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டில் முகவரியை மாற்றும் வழிமுறைகள்:

  • முதலில் UIDAI-இன் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • உங்கள் ஆதார் நம்பருடன் பதிவு செய்யப்பட்ட, மொபைல் நம்பரை என்டர் செய்து, “Send OTP” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் மொபைல் நம்பருக்கு இப்போது ஒரு OTP வரும். அந்த OTP-யை என்டர் செய்து “Login” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்தபடியாக இணையதளத்தில் ஒரு புதிய பக்கத்தை ஸ்க்ரோல் செய்து “Address Update” என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் “Update Aadhaar Online” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • புதிய பக்கம் ஒன்று அதன்பின் அங்கு  தோன்றும். அதில் உள்ள தகவல்களை பார்த்துவிட்டு பின்பு “Process to Update Aadhaar” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • எந்தெந்த தகவல்களை மாற்ற வேண்டுமோ அதைத் திருத்திக் கொண்டு
    Address என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், தற்போதைய முகவரி திரையில் தோன்றும்.
  • பின்னர் மாற்றம் செய்ய விரும்பும் புதிய முகவரி விவரங்களை அதன் கீழ் தோன்றும் “Details to be Updated” என்ற பிரிவில் என்டர் செய்ய வேண்டும்.
  • புதிய முகவரியை முழுவதுமாக பதிவேற்றிய பிறகு, முகவரிக்கான ஆதாரமாக எலக்ட்ரிசிட்டி பில்லை அப்லோட் செய்ய வேண்டும். முகவரி மாற்றத்தைச் செயல்படுத்த ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும்.

நீங்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பேங்க் பாஸ்புக், டிரைவிங் லைசன்ஸ், சமீபத்திய எலக்ட்ரிசிட்டி பில், சமீபத்திய லேண்ட்லைன் பில், ஓய்வூதிய அட்டை, பெயர் மற்றும் முகவரி அடங்கிய பள்ளி டிரான்ஸ்பர் சர்டிபிகேட் (TC) என எதை வைத்து வேண்டுமானாலும் வைத்து ஆதார் புதுப்பிக்கலாம்.

முகவரியை புதுப்பித்த பிறகு மீண்டும் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், “Preview Page” என்பதற்கு சென்று பார்த்துவிட்டு  பிறகு மீண்டும் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

Leave a Comment

Join Group!