ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இன்ப செய்தி: ஏர்டெலின் புதிய குறைந்த கட்டண ரீசார்ஜ் பிளான்கள்! உடனே பாருங்க

Airtel New Recharge Plans: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்றைய காலகட்டத்தில் நம்மால் மொபைல் போன் இல்லாமல் பயணிக்க இயலாது. அனைவரும் ஸ்மார்ட்போன் யூஸ் செய்கின்ற காரணத்தால் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அனைவரும் Whatsapp, Facebook, Instagram போன்ற செயலிகளை பயன்படுத்தி காரணத்தால் டேட்டா பேக் சேர்த்து ஒரு கணிசமான தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது.

காலாண்டுக்கு மற்றும் ஒரு ஆண்டுக்கு சேர்த்து ரீசார்ஜ்

ஓரிரு ஆண்டுகளாக இந்த ரீசார்ஜ் செய்யும் கட்டணம் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் குறைந்த விலையில் நிர்ணயம் செய்து இருந்தது. ஆனால் தற்போது நாம் ரீசார்ஜ் செய்யும் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது மக்களின் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. சில நிறுவனங்கள் கட்டண தொகையை காலாண்டுக்கு மற்றும் ஒரு ஆண்டுக்கு சேர்த்து ரீசார்ஜ் செய்யும் போது குறைத்து உள்ளது.

அதன் காரணமாக பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் காலாண்டு ரீசார்ஜ் தற்போது செய்ய தொடங்கி விட்டனர். காலாண்டு என்பது 90 நாட்கள் வேலிடிட்டி பெறப்படும் ரீசார்ஜ் திட்டமாகும். தற்போது ஏர்டெல் நிறுவனம் ஆனது மற்ற நிறுவனத்தைக் காட்டிலும் குறைந்த விலையில் அதிக சலுகைகள் கொண்ட 90 நாட்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள 929 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் ஆனது தனது நெட்வொர்க்கை பயன்படுத்துகின்ற மக்களுக்கு 929 ரூபாய் ரீசார்ஜ் செய்யும் 90 நாள் வேலிடிட்டி கொண்ட புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 1 ஜிபி இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி மற்றும் வரம்பற்ற கால் செய்யும் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி போன்றவற்றை 90 நாட்களுக்கு இந்த திட்டம் வழங்குகிறது. இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கணிசமான தொகை மிச்சம் ஆகிறது.

ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள ரூபாய் 1999 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் வாடிக்கையாளர் ரூபாய் 1999 ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும்போது அவர்கள் ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் பலனை பெறலாம். இது ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் அவருக்கு ஒரு நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் செய்யும் வசதி மற்றும் வருடம் முழுவதும் வரம்பற்ற கால் பேசும் வசதி பெறலாம்.

ரூபாய் 1999 ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் 24 ஜிபி அதிவேக இன்டர்நெட் வசதி அதன் பிறகும் குறைந்த வேகத்தில் டேட்டா யூஸ் செய்யும் வசதி போன்ற பலன்களை இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் பெறலாம். மாதம் ரூபாய் 166 வீதம் கட்டணத் தொகை ஒரு வருடத்திற்கு 1999 என இத்திட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 799 ரீசார்ஜ் பிளான்

இந்த தொகைக்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் 24 மணி நேரமும் வரம்பற்ற கால்களை நீங்கள் பேசி மகிழலாம். இதன் வேலிடிட்டி மூன்று மாதங்கள் ஆகும். நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி இன்டர்நெட் வசதி உங்களுக்கு கிடைக்கும். இந்த பிளானில் நீங்கள் இலவச Hello Tune செட் செய்து கொள்ளலாம்.

ஏர்டெல் நிறுவனம் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் அதிவேக இன்டர்நெட் கால் செய்யும் வசதியை குறைவான கட்டணத் தொகையில் தற்போது அளித்து வருகிறது எனவே வாடிக்கையாளராகிய நீங்கள் இது போன்ற காலாண்டு மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து உங்களது கட்டணத் தொகையை சேமித்துக் கொள்ளலாம்.

Leave a Comment

Join Group!