Bank Loan Apply: நாளுக்கு நாள் மனிதர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக மனிதன் நிறைய நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. அதன் மூலம் அவன் தனக்குத் தேவையான வருமானத்தை ஈட்டுகின்றான். இந்த நிலை அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதன் காரணமாக அதிகப்படியான மக்கள் தம் தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிகளில் கடன்களை பெறுகின்றனர்.
தற்போதுள்ள சூழலில் வங்கிகளில் லோன் பெறுவதற்கு நகையோ அல்லது மற்ற பத்திரங்களோ தேவையில்லை. உங்களுடைய சிபில் ஸ்கோரை பார்த்து வங்கியில் தற்போது கடனைத் தர முன்வந்துள்ளனர்.

சிபில் ஸ்கோர்:
ஒருவர் வங்கியில் தனிநபர் கடன் அல்லது வீட்டு கடன் பெற விரும்பினால் அவர் வங்கிக்கு சென்று அப்ளை செய்ய வேண்டும். வங்கி அதிகாரி அவருடைய சிபில் ஸ்கோரை முதலில் ஆராய்வார். சிபில் ஸ்கோர் என்பது அவர் இதற்கு முன்னர் ஏதாவது கடன் வாங்கி அதை எப்படி செலுத்தினார் என்பதை பொறுத்து மாறுபடும்.
இந்த சிபில் ஸ்கோரின் மதிப்பு 300 முதல் 900 வரை இருக்கும். ஒருவர் 750 மதிப்பிற்கு மேல் சிபில் ஸ்கோர் பெற்றால் அவருக்கு எளிதாக அவர் கேட்கும் லோன் கிடைத்துவிடும். சிபில் ஸ்கோர் குறைந்த பட்சத்தில் அந்த வங்கி அந்த நபருக்கு கடன் அளிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை ஆலோசித்து நிர்ணயம் செய்யும்.
கடன் வாங்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை:
ஒருவர் வங்கியில் கடன் வாங்கும் முன் அந்தக் கடன் தொகையை நாம் செலுத்த முடியுமா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கடன் தொகையை சரிவர பயன்பாட்டுக்கு பயன்படுத்தி அதனை விரைவில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இனிதாக உங்களால் இந்த கடன் தொகையை முடிக்க இயலும்.
வங்கியில் நீங்கள் பெரும் கடனுக்கு வட்டி விதிக்கப்படும். தோராயமாக ஒருவர் வங்கியில் இருந்து கடன் பெற்றால் 8 முதல் 10 சதவீதம் அவருக்கு வட்டி விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை நீங்கள் அசலுடன் இணைத்து செலுத்த வேண்டும். எனவே உங்களுக்கு தேவையான தொகையை மட்டுமே நீங்கள் லோனாக வங்கியிலிருந்து பெற வேண்டும்.
வங்கிகளை தேர்வு செய்யும் முறை
இந்தியாவில் பல்வேறு வகையான வங்கிகள் கடன் கொடுக்க தயாராக உள்ளனர். நீங்கள் அனைத்து வங்கிகளையும் கருத்தில் கொள்ளாமல் எந்த வங்கி உங்களுக்கு சரியான விதிமுறைகளை விளக்கி கடன் கொடுக்கின்றதோ அந்த வங்கியை மட்டுமே நீங்கள் கடன் பெற தேர்வு செய்ய வேண்டும்.
குறைவான வட்டி விகிதத்தில் கடன் அளிக்கக்கூடிய வங்கிகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுடைய வட்டி அளவு குறையும் நீங்கள் அசல் தொகையை விரைவாக செலுத்த ஏதுவாக இருக்கும்.
சேவை கட்டணம்
பல வங்கிகள் கடன் தொகையை தருவதற்கு சேவை கட்டணத்தை வசூலிக்கின்றது. இந்த சேவை கட்டணத்தை செலுத்தும் முன் அதற்கான அனைத்து விதமான விவரங்களையும் நீங்கள் சரிவர அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த முறைகளை பயன்படுத்தி நீங்கள் வங்கிகளில் கடன் தொகையை பெறலாம். அதுமட்டுமில்லாமல் கடன் தொகையை பெறுவதற்கு இப்பொழுது நீங்கள் ஆன்லைன் மூலமாகவே அப்ளை செய்ய இயலும்.