Free Smart Phone Apply: இனிய வணக்கம் நண்பர்களே! தமிழகத்தில் தமிழக அரசாங்கத்தினால் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அந்த உதவித்தொகையைப் பெற்று தம் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது அவற்றின் ஒரு பகுதியான இந்த ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தின் மூலமாக பல்வேறு தரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து இந்த ஸ்மார்ட் போன் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசினால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்:
பெண்களுக்காக மகளிர் உரிமை தொகை திட்டம், பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம், மாணவர்கள் உயர்கல்விக்காக தமிழ் புதல்வன் திட்டம், அனைவரும் வேலை பெற நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு வகையான திட்டங்கள், தமிழக அரசினால் கொண்டுவரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசானது தற்போது கையில் எடுத்துள்ளது. அதைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் விரிவாக காணலாம்.
ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம்:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் அடைய அவர்களுக்கு பயன்படும் வகையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் தமிழக அரசு தொடங்க உள்ளது. இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வரவேற்கப்படுகின்றது. இந்தத் தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
தென் சென்னை எல்லைக்கு உட்பட்ட காது கேட்காத மற்றும் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து ஸ்மார்ட்போன்களை பெறலாம் என்று தகவல் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கல்வி பயில்பவர்கள் சுயதொழில் செய்பவர்கள் தனியார் கம்பெனியில் பணிபுரிபவர்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களும் ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் பெற தகுதிகள் என்னென்ன?
- ஒரு மாற்றுத்திறனாளி காது கேட்காதவராகவோ அல்லது பார்வையற்றவராகவோ இருந்து அவரின் ஊனத்தின் தன்மை 80 சதவீதமாக அல்லது 100% ஆக இருந்தால் அவர் இந்த ஸ்மார்ட்போன் பெற விண்ணப்பிக்கலாம்.
- ஒரு மாற்றுத்திறனாளி டிகிரி முடித்து தனியா துறையில் பணிபுரிபவராக இருந்தாலோ அல்லது சுயதொழில் செய்து வந்தாலோ அவரும் அவரின் சர்டிபிகேட்டை வைத்து ஸ்மார்ட்போன் பெற விண்ணப்பிக்கலாம்.
- பாலிடெக்னிக் படிப்பை படிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த மாற்றுத்திறனாளி மாணவர்களும் இந்த ஸ்மார்ட்போன் பெற விண்ணப்பிக்கலாம்.
- இந்த ஸ்மார்ட் போன் பெற அதிகபட்ச வயது வரம்பு 70 ஆகும்.
- அரசுத் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் இந்த ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பிக்க இயலாது.
எந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
ஸ்மார்ட்போன் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இ சேவை மையத்தின் வாயிலாக ஸ்மார்ட்போன் தர விண்ணப்பிக்க வேண்டும். இ சேவை மையத்தில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள டாக்குமெண்டை அப்லோட் செய்து, விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பித்த மாற்று திறனாளிகளை நேர்காணல் தேர்வு நடத்தி அவர் தகுதியானவராக இருந்தால் அவருக்கு ஸ்மார்ட்போன் பெற அரசனது வழிவகை செய்யும். இவ்வாறு ஸ்மார்ட்போன் பெற மாற்றுத் திறனாளிகள் 19 8 2024க்குள் தங்களது விண்ணப்பத்தை இ சேவை மையத்தின் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.