IBPS PO Last Date Apply: வங்கி வேலை பெற ஆர்வம் செலுத்தும் தேர்வர்கள் கவனத்திற்கு, வங்கி பணியாளர் தேவாணையம் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 28 நாளை கடைசி நாள்.

IBPS அமைப்பு கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 4455 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலி பணியிடங்களின் விவரங்கள்
வங்கி பணியாளர் தேவாணையம் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 4455. மாத சம்பளம் Rs.70,000 வரை கிடைக்கும்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி
விண்ணப்பதாரர் 01.08.2024 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை
இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
முதல்நிலைத் தேர்வு
முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வு
முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (35), திறனறிதல் (45), கணிதம் (35) மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial/Banking Awareness) (40) என மொத்தம் 155 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம். அதனைத் தொடர்ந்து, இரண்டாம் பகுதியான விரிவாக எழுதுதல் தேர்வு நடைபெறும். இதில் கட்டுரை அல்லது கடிதல் எழுதுதல் தொடர்பாக இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள். இந்த முதன்மைத் தேர்வுகள் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 2025 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibps.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.850. எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றத்திறனாளி பிரிவுகளுக்கு ரூ.175.

விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள்
ISRO LPSC காலியாக உள்ள 30 Technical Assistant, Technician B, Heavy Vehicle Driver ‘A’, Light Vehicle Driver ‘A’ மற்றும் Cook பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணியின் அறிவிக்கை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 12 ஆகஸ்ட் 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28 ஆகஸ்ட் 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply