Indian Bank Job Recruitment 2024: வங்கி துறையில் அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் நாடு முழுவதும் 1500 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 15 முதல் ஜூலை 31 என வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பணியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம், வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலி பணியிடங்களின் விவரங்கள்
இந்தியன் வங்கியில் நாடு முழுவதும் 1500 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த 1500 பணியிடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 277 இடங்கள் இடம்பெற்றுள்ளது. ஆண், பெண் இருபாலருக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாதம் Rs.17000 சம்பளம் கிடைக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
ஊரக வளர்ச்சி வங்கி NABARD Bank பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது OBC மற்றும் EWS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் Rs.850 , Women, SC, ST மற்றும் PWD பிரிவினருக்கு Rs.100 விண்ணப்ப கட்டணம்.
விண்ணப்பிக்க வயது விவரம்
இந்தியன் வங்கி தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 ஆம் தேதி படி 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையும் கூடுதலாகத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதலாக 10 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படுவதாகவும், கணவரை இழந்த மற்றும் பிரிந்த பெண்களுக்கு 35 வயது முதல் 40 வயது வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
இந்தியன் வங்கி தொழில் பழகுநர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி படி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை
இந்தியன் வங்கி தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் 100 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடைபெறும். பின்னர் உள்ளூர் மொழிக்கான தேர்வும் நடத்தப்பட்டு தொழில் பழகுநர் பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
இந்தியன் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்களது விண்ணப்பத்தினை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
-
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
-
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்
-
- அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
-
- தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
-
- அனைத்து தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள்
விண்ணப்பிக்கும் பணியின் அறிவிக்கை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 15 ஜூலை 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31 ஜூலை 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply