ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பல புதிய ரீசார்ஜ் திட்டங்கள்! சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்

Jio New Attractive Prepaid Plan 2024: இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று ஜியோ நிறுவனம் ஆகும். ஜியோ நிறுவனம் அடிக்கடி கட்டண சலுகை வழங்கியும், கட்டண ஏற்றத்தையும் செய்து வருகிறது. சமீபத்தில் ஜியோ நிறுவனம் ஆனது ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது. இது ஜியோ சிம்மை பயன்படுத்துபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல்வேறு புதிய திட்டங்கள்:

ஜியோ நிறுவனம் ஆனது அதனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை தனது பயனாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் குறைந்தன கட்டணத்தில் அதிக வேலிடிட்டி உடன் கூடிய பிளானை ஜியோ பயனாளர்கள் பெறுவார்கள். இந்த சலுகை திட்டங்களைப் பற்றி இந்த கட்டுரை விரிவாக காண்போம்.

ஜியோ நிறுவனத்தின் ரூபாய் 349 பிரிபெய்ட் பிளான்:

ஜியோ நிறுவனம் ரூபாய் 349 பிரிபேட் பிளானில் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. தற்போது பயனாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் இந்தப் பிளானின் வேலிடிட்டியை 30 நாட்களுக்கு ஜியோ நிறுவனம் மாற்றியுள்ளது. இதனால் பயனளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த பிளானை ஆக்டிவேட் செய்பவர்களுக்கு தினமும் 2 ஜிபி இன்டர்நெட் வசதியும் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் இணைந்துள்ள பயனார்களுக்கு அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ், அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் இந்த ரீசார்ஜ் மூலம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விவரம் என்னும் ஜியோ வெப்சைட்டில் வெளியிடப்படவில்லை. இது ஜியோ வெப்சைட்டில் விரைவாக வெளியிடப்படும் என 91mobiles இணையதளம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜியோவின் முக்கியமான மூணு பிரிபெய்டு திட்டங்களை பற்றி நாம் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் 329 ரூபாய் பிரிபெய்ட் திட்டம்

இந்த திட்டம் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டது. அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் SMSகள் இந்த திட்டத்தின் மூலம் பெறலாம்.இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனளர்களுக்கு தினசரி 1.5 GB இணையதள வசதி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செவன் ப்ரோ, ஜியோ கிளவுட் போன்ற பல்வேறு வசதிகளை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூபாய் 949 பிரிபெய்ட் பிளான்

இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி போன்றவற்றை பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் தினசரி 2GB இன்டர்நெட் வசதி கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தை பயன்படுத்துபவர்களுக்கு ஜியோ டிவி ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் அதுமட்டுமில்லாமல் மூன்று மாதம் டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூபாய் 149 பிரிபெய்ட் பிளான்

அன்லிமிடெட் கால் செய்யும் வசதி தினசரி 100 எஸ்எம்எஸ் SMS பெற முடியும். இந்த பிளானில் ரீசார்ஜ் செய்வது மூலம் தினசரி 2GB இன்டர்நெட் 84 வேலிடியுடன் பெற்று மகிழலாம். ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் மற்றும் சோனி லைவ், ஜி பைவ் ஆகியவற்றை இந்த பிளானின் மூலம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே ஜியோ பயனாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பிரிபெய்ட் திட்டங்களையும் படித்து, எந்த திட்டம் உங்களுக்கு ஏற்றதாக உள்ளதோ அந்த திட்டத்தில் இணைந்து நீங்கள் உங்களுடைய மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

Leave a Comment

Join Group!