LPG Cylinder Price Sales New Update 2024: இந்தியாவில் விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமையல் செய்து வந்த காலங்கள் போய் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் பெண்கள் சமையல் பணிகளை செய்து வருகின்றனர்.சில மாதங்களாகவே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் வீட்டு சிலிண்டரை வாங்கி பல பேர் கள்ள சந்தையில் விற்பனை செய்கின்றனர் அவனையும் தடுக்க மத்திய அரசானது நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மகிழ்ச்சி தகவல்
இந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இந்த மாதம் குறைக்கப்படலாம் என்ற மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை மற்றும் குறைப்பை தற்போது எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன.
கடந்த 4 மாதங்களுக்கு முன் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ. 918க்கு விற்பனை செய்யப்பட்டது. கச்சா எண்ணெயின் விலையை அடிப்படையாக வைத்து தான் கேஸ் சிலிண்டர் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது 4 மாதங்களில் 100 ரூபாய் அதில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கச்சா எண்ணையின் விலை குறைந்து வருகின்றது. சூழ்நிலையில் இந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலிண்டரில் க்யூ ஆர் கோடு
மேலும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டரில் க்யூ ஆர் கோடு QR Code பதிவிடும் முறையும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. க்யூ ஆர் கோட் கொண்டு வருவதன் மூலம் கேஸ் விற்பனை முற்றிலுமாக மாற உள்ளது.
இதற்கான அறிவிப்பும் இந்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் மட்டுமே இனி உங்களால் வீட்டு உபயோக சிலிண்டரை வாங்க இயலும். இது சிலிண்டர்களை திருடுபவர்களை கண்டுபிடிக்க மற்றும் சிலிண்டர் திருட்டை தடுக்க மிக உறுதுணையாக இருக்கும்.
Read More – சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு! உங்களுக்கான சூப்பர் தகவலை பாருங்க
அது மட்டுமல்லாமல் கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துவோரையும் இந்த சிலிண்டர்கள் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க பயன்படும்.
இதன் காரணமாக வீடுகளுக்கு இனி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது.
Also Read This – கலைஞரின் கனவு இல்ல திட்டம்: ரூபாய் 3 லட்சம் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்க போகுது?
உங்களது மொபைல் நம்பர் மற்றும் ஆதார் எண்ணை கேஸ் சிலிண்டர் வாங்கும் அலுவலகத்தில் கொண்டு சென்று பதிவு செய்ததன் மூலம் மட்டுமே உங்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டர் கிடைக்கும். மேற்கண்ட விலை குறைப்பு ஏற்பட்டால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.