சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு! உங்களுக்கான சூப்பர் தகவலை பாருங்க

LPG Gas Quantity Calculate: வணக்கம் நண்பர்களே! இன்றைய விரைவு காலகட்டத்தில் மக்கள் தம் பணியை ஓட்டத்துடன் செய்து வருகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் மக்கள் சமையலுக்கு அடுப்பை பயன்படுத்தினர். இதற்காக பல பகுதிகளில் சென்று சிறிய மற்றும் பெரிய விறகுகளை கொண்டு வந்து அடுப்பில் சமையல் செய்தனர்.

தற்போது இதற்கு மாற்றாக LPG எல்பிஜி எனப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரை நாம் சமையல் செய்ய பயன்படுத்தி வருகின்றோம். அந்த சிலிண்டரை பயன்படுத்துவது எவ்வளவு எளிமையோ அந்த அளவுக்கு அதில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாம் கையால வேண்டி இருக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சரிவர காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த சமையல் எரிவாயுவில் உள்ள கேஸ் அளவை நம் சரிவர கண்காணிக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவது எவ்வளவு நன்மை அளிக்கிறதோ அந்த அளவுக்கு நாம் அதில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டி இருக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரை எவ்வாறு பொருத்த வேண்டும்?

வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரை நாம் தரையில் அப்படியே வைத்து பயன்படுத்தக்கூடாது.. நாம் எரிவாயு சிலிண்டரை தரை மட்டத்திலிருந்து சிறிது உயரமாக சுவரை ஒட்டி வைத்து தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல சிலண்டரை படுக்க வைத்தோ அல்லது சாய்த்தோ பயன்படுத்தக் கூடாது. நேராக நிற்க வைத்து பயன்படுத்த வேண்டும்.

சிலிண்டர் அடுப்பை பயன்படுத்தும் முறை

சிலிண்டர் அடுப்பில் பொருத்தப்படும் ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாய் ISI ஐஎஸ்ஐ முத்திரையோடு இருக்க வேண்டும். ஏனென்றால் டூப்ளிகேட் பொருட்களை பயன்படுத்துவதால் கேஸ் கசிவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே தரமான அடுப்பு மற்றும் தரமான ரப்பர் குழாயை பயன்படுத்த வேண்டும். சிலிண்டரை அணைக்கும் போது ரெகுலேட்டர், ரப்பர் குழாய் சேர்த்து நாம் மூடி வைக்க வேண்டும்.

LPG Gas Quantity Calculate
LPG Gas Quantity Calculate

சிலண்டில் ஏதாவது கேஸ் கசிவு ஏற்பட்டால் நாமாகவே எக்காரணத்துக்கு ஒன்னும் சரி செய்யக்கூடாது. கேஸ் ஆபரேட்டரை கூப்பிட்டு அவர்களை வைத்து தான் நாம் சரி செய்ய வேண்டும். சிலிண்டர் மாற்றும் போதும் எக்காரணத்தை கொண்டு நெருப்பு சம்பந்தமான பொருட்களை அருகில் கொண்டு வரக்கூடாது. சரியான முறையில் தான் கவனத்துடன் சிலிண்டரை பொருத்த வேண்டும்.

சிலிண்டரில் உள்ள கேசின் அளவை கண்டறியும் முறை

நமது சிலிண்டரில் எவ்வளவு கேஸ் உள்ளது மற்றும் நாம் எவ்வளவு அளவு கேஸ் பயன்படுத்தி விட்டோம் என்பதை அறிய ஒரு எளிய முறை உள்ளது. அது என்னவென்றால் ஒரு ஈரத் துணியை எடுத்துக்கொண்டு நாம் சிலிண்டரை முழுமையாக துடைக்க வேண்டும். அப்போது சிலிண்டரில் உள்ள ஈரப்பதம் விரைவாக காயத் தொடங்கி விடும். எந்த இடத்தில் இருந்து சிலிண்டரின் ஈரப்பதம் மெதுவாக காய்கின்றதோ அந்த இடம் வரை கேஸ் முழுமையாக உள்ளது என்பது அர்த்தம்.

இன்னொரு வழிமுறை என்னவென்றால் சமையல் கேஸ் சிலிண்டரின் மேலிருந்து கீழாக நம் கையில் தண்ணீர் தொட்டு ஒரு கோடு இழுத்தால், கேஸ் இல்லாத பகுதியில் தண்ணீர் விரைவாக உலர்ந்து விடும் கேஸ் உள்ள பகுதியில் தண்ணீர் மெதுவாக காயும் இதனை வைத்தும் நம் கேஸ் அளவை கண்டறியலாம்.

இந்த எளிய முறைகளை வைத்து நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டரின் அளவை அறியலாம் அது மட்டுமல்லாமல் நீங்கள் எவ்வளவு அளவு கேஸ் பயன்படுத்தி உள்ளீர்கள் மற்றும் உங்கள் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் எவ்வளவு மீதம் உள்ளது என்பதையும் நீங்கள் இந்த முறையை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

Join Group!