பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ! PM House Scheme Apply Procedure 2024

PM House Scheme Apply Procedure 2024: மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று வீடு ஆகும். இந்திய நாட்டில் பல பேர் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டிலிருந்து தம் வாழ்வை நடத்தி வருகின்றனர். அவர்களின் கனவு சொந்த வீடு கட்டி விட வேண்டும் என்பதுதான். இதனை கருத்தில் கொண்டு பிரதமர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். 2015 ஆம் ஆண்டு பிரதமர் ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு கட்டி அதில் குடியேறலாம். நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வீடு இல்லாத மக்கள் பல பேர் பயன் பெறுவார்கள். ஒவ்வொருவரும் சொந்த வீட்டில் வசிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிரதமர் வீடு வழங்கும் திட்டம்

இந்த திட்டம் இரு வகைப்படும் ஒன்று நகர்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம் இன்னொன்று கிராமப்புற ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம்.
இந்த திட்டத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கியின் மூலம் கடன் பெறலாம். கடன் தொகையில் 6.5% வட்டி சலுகை கிடைக்கும். 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை கடனாக பெற்று வீடு கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை வீடு கட்ட நினைக்கும் பயனாளர்கள் பயன்படுத்தி வீடு கட்டவோ அல்லது வாங்கவோ இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் தொகையைப் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை நாம் கீழே பார்ப்போம்.

விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • இந்தத் திட்டம் கட்டுமான நிறுவனத்திடமிருந்து புது வீடு வாங்குவோருக்கும், தங்களின் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு மட்டுமே பொருந்தும். பழைய கட்டப்பட்ட வீட்டை வாங்குபவர்களுக்குப் பொருந்தாது.
  • ஒரு வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனத்திடமிருந்து, மற்றொரு வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனத்துக்கு மாற்றும் கடனுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் மானியத்தொகை பெற்றாலும் கடனை முன்கூட்டியே செலுத்தி முடிக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மானியத்தொகை கடன் கணக்கில்  வரவு வைக்கப்பட்டவுடம், கடன் தொகை குறைக்கப்பட்டு, மீதமுள்ள கடன் தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும்.

Also Read This – கலைஞரின் கனவு இல்ல திட்டம்: ரூபாய் 3 லட்சம் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்க போகுது?

விண்ணப்பிக் தகுதிகள் என்ன?

  • விண்ணப்பதாரர்18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இத்திட்டத்தின் கீழ் ஒரு முறை பயன் பெற்ற பிறகு, மீண்டும் அதைப் பெற முடியாது.
  • திட்ட பலனை பெறுபவர்களுக்கு இந்தியாவில் எங்கும் கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது. ஏற்கனவே வீடு வாங்க அரசு மானியம் எடுத்திருக்கக் கூடாது.
  • பயனாளிகள் மேற்சொன்ன வருமான வரம்புகளில் வர வேண்டும். அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  • பயனாளியில் கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளும் இருக்கலாம்.
  • 21 சதுர அடிக்கும் குறைவான வீடு உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள வீட்டை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் இணையலாம்.
  • குடும்பத்தில் உள்ள சம்பாதிக்கும் வயது வந்தவர்கள் தனிக் குடும்பமாக கருதப்படுவர். அதனால் அவர்களின் திருமண நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களும் இந்த திட்டத்தின் பயனாளிகளாக கருதப்படுவார்கள்.
  • திருமணமான தம்பதியரில் ஒருவரோ அல்லது இருவரும் இணைந்தோ, இந்த திட்டத்திற்கான வருமான உச்சவரம்பு தகுதி இருக்கும்  பட்சத்தில் ஒரு தனி வீடு பெற தகுதி உடையவர் ஆவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதி வாய்ந்த நபர்கள் , pmaymis.gov.in என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று  விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் லாகின் செய்து சிட்டிசன் அசெஸ்மென்டை (Citizen Assessment) க்ளிக் செய்ய வேண்டும். குடிசை வாழ் மக்களாக இருந்தால் குடிசைவாசிகள் அல்லது benefits under other 3 components என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.

பின்னர், உங்கள் ஆதார் விவரம், வங்கிக் கணக்கு, பெயர், ஊதியம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி, குடும்பத் தலைவரின் பெயர், வீட்டின் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை பதிவிட வேண்டும். அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

நேரடியாக பொதுச் சேவை மையத்திற்குச் சென்று நீங்கள் விரும்பினால்  விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்தி படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்கு rhreporting.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Comment

Join Group!