PM Kisan Yojana Benefits 2024: இந்திய நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் PM Kisan Yojana பி எம் கிசான் யோஜனா. இது 2019ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் விவசாயிகளுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் ரூபாய் 6000 வருவாயாக செலுத்தப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பலர் விவசாய பயன்பாட்டுக்கு இந்த பணத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பெரும் ஊக்குவிப்பை ஏற்படுத்துகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை இந்த கட்டுரையின் வாயிலாக நாம் காண்போம்.
திட்டம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம்:
PM Kisan Yojana பி எம் கிசான் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் விவசாயிகளை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய செய்வது ஆகும். விவசாயிகள் சிறப்பான முறையில் விவசாயம் செய்து அவர்களுடைய தரத்தை உயர்த்த இந்த திட்டம் பெரும் அளவில் பயன்படுகிறது. நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
PM Kisan Yojana திட்டத்தை பெறுவதற்கான வரைமுறைகள்:
- அரசு வேலையில் இருந்து மற்றும் விவசாயம் செய்பவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.
- அரசியலில் ஈடுபடுபவர் மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.
- ஒரு விவசாயினுடைய ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே அவரால் இந்த திட்டத்தில் இணைய முடியும்
- அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.
பயனாளிகளின் பெயரை சரிபார்ப்பதன் அவசியம்:
ஒருவர் இந்த திட்டத்தில் இணைந்து இருந்தால் அவர் அவருடைய பெயரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் அப்படி சரி பார்ப்பதன் மூலமாக மட்டும்தான் அவர் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியும்.
பயனாளிகளின் பட்டியலை எவ்வாறு சரி பார்ப்பது?
- முதலில் https://pmkisan.gov.in/ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும் .
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘பயனாளி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் மாவட்டம், தாலுகா மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு அங்கு ‘Get Report’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- பதிவிறக்கம் செய்யப்பட்ட PDF ல் உங்கள் பெயரைக் சரி பார்க்கவும் .
வருடத்திற்கு மூன்று தவணைகள்:
இந்த திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருடம் ரூபாய் 6000 மானிய தொகையாக கிடைக்கும். இது வருடத்திற்கு மூன்று தவணையாக 2000 வீதத்தில் விவசாய உடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
பிரதமர் கிசான் சம்மன் யோஜனா கொண்டு வந்ததன் முக்கிய நோக்கம் விவசாயிகளின் தரத்தை உயர்த்துவதாகும்.
இதன் காரணமாக நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகள் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். எனவே அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தை பயன்படுத்தி உங்களது பெயரை பதிவு செய்து கொண்டு இந்த திட்டத்தின் பலனை பெற்று விவசாயத்துறையில் சிறப்பான நிலையை அடைய வேண்டும்.