மத்திய அரசின் 2000 ரூபாய் உதவித்தொகை: கிடைக்கும் தேதி அறிவிப்பு – ஆனால் சில நிபந்தனைகள்!

PM Kissan Yojana 18th Installment: நம் நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுபவர்கள் விவசாயிகள் ஆவர். விவசாயத் துறை இல்லை என்றால் மனிதனின் வாழ்க்கையே இல்லை. மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு ஆகும். இதற்காகத்தான் மனிதன் அனுதினமும் உழைத்துக் கொண்டிருக்கிறான். விவசாயத்துறையை முன்னேற்ற மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சில சமயம் இயற்கை சீற்றத்தின் காரணமாக விவசாயத்துறையில் விவசாயிகளுக்கு பெரும் அளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த சமயத்தில் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பயிர் சேதத்திற்கான நிவாரண உதவித் தொகையை கொடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் பயிர்களுக்கு காப்பீடு வசதியும் ஏற்படுத்தித் தருகிறது.

PM Kissan Yojana 18th Installment
PM Kissan Yojana 18th Installment

பிஎம் கிசான் யோஜனா

நாட்டின் உயர்ந்த நிலையில் உள்ள விவசாயிகளின் நிலையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல மத்திய அரசால் தொடங்கப்பட்ட பொருளாதார திட்டம் தான் பிஎம் கிசான் யோஜனா. இதன் மூலம் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூபாய் 6000 உதவித்தொகை மூன்று தவணைகளாக ரூபாய் இரண்டாயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்படுகிறது.

ரெண்டு ஹெக்டருக்கு அதிகமான நிலத்தை கொண்டுள்ள விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். இது மத்திய அரசால் விவசாயிகளை மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்க கொண்டுவரப்பட்ட ஊக்குவிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் காரணமாக நாட்டில் உள்ள விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் பெரும் அளவில் பயன் பெறுகின்றனர்.

17ஆவது தவணைத் தொகை

நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக விவசாயிகளுக்கு 17 வது தவணைத் தொகையான ரூபாய் 2000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டு புதிய அரசாங்கம் பதவியும் ஏற்றது. பின்னர் நிலுவைத் தொகையான 2000 ரூபாய் ஜூன் மாதத்தில் வழங்கியது.

18வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும்

17 வது தவணைத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வர வைக்கப்பட்ட பிறகு, தற்போது விவசாயிகள் மத்தியில் 18வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 18-வது தானே தொகையான ரூபாய் 2000 விவசாயிகளின் வங்கி கணக்கில் அக்டோபர் மாதம் செலுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

18வது தவணைத் தொகை கிடைக்க சில கட்டுப்பாடுகள்

விவசாயிகள் 18வது தவணைத் தொகை ரூபாய் 2000 பிஎம் கிஷான் யோஜனா மூலம் பெற சில விஷயங்களை கண்டிப்பாக செய்து இருக்க வேண்டும். அது என்னவென்றால் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கை e-KYC  ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செய்திருக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் ஆவணங்களை சரிவர பதிவேற்றிருக்க வேண்டும். அப்படி செய்த பயனாளிகளுக்கு மட்டும் தான் பதினெட்டாவது தவணைத் தொகையான ரூபாய் 2000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

எனவே இந்த திட்டத்தின் மூலம் பயன் பெரும் விவசாயிகள் உடனடியாக e-KYC செய்து ஆவணங்களை பதிவேற்றவும். அப்படி பதிவேற்றம் செய்து இந்த தொகையை பெற்று பயன்பெறுங்கள்.

Leave a Comment

Join Group!