PM Surya Ghar Yogana: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் மனிதனின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அத்தியாவசிய தேவை பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. ஆனால் மனிதனின் வருமானம் குறைந்து கொண்டே செல்கிறது. கரண்ட் பில் முதல் செல்போன் ரீசார்ஜ் பில் வரை அனைத்துமே அதிகரித்துள்ளது. அதனால் மனிதன் மாற்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
மின்சாரம் மாற்று வழிமுறை:
இன்றைய காலகட்டத்தில் மனிதன் தேவைகளில் மிக முக்கியமானது மின்சாரம் ஆகும். மின்சாரம் இல்லாமல் வீடோ அல்லது தொழிற்சாலைகளோ இயங்குவது கடினம். இத்தகைய மின்சாரத்தை நாம் மிச்சம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனால் மாற்று வழிமுறையில் மின்சார பயன்பாட்டை கொண்டுவர அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பிள்ளை குறைக்க மத்திய அரசாங்கம் ஆனது பி எம் சூர்யா கர் யோஜனா என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்காக மத்திய அரசாங்கம் ஆனது பட்ஜெட்டில் நிதியையும் ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.
பி எம் சூர்யா கர் யோஜனா
இந்த திட்டத்தின் மூலம் வீட்டின் மேற்கூறையில் சோலார் பேனல் அமைத்து, அதன் மூலம் மின்சாரம் தயாரித்து வீட்டின் பயன்பாட்டிற்கு நாம் பயன்படுத்தலாம். இதன் காரணமாக நாம் செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் முற்றிலுமாக மிச்சமாகிறது.
இது திட்டத்தின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் மின்சாரம் வழங்குவதாகும். வீட்டின் பயன்பாட்டிற்கு மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை நீங்கள் அரசாங்கத்திற்கு விற்பனையும் செய்யலாம். இந்த திட்டத்திற்கு பிரதம மந்திரி கர் யோஜனா மூலம் உங்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது.
எவ்வளவு மானியம் வழங்கப்படும்?
இத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் சொந்த வீட்டை கொண்டு இருக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் தான் இந்த சோலார் பேனல் அமைக்கப்படும். அதன் காரணமாக வீட்டின் மேல் கூரை சோலார் பேனல் அமைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். சோலார் பேனலை அமைத்து அதை நமது வீட்டின் மின் இணைப்புடன் கனெக்ட் செய்ய வேண்டும்.
இந்த சோலார் பேனல் அமைக்க ஒரு கிலோவாட்டிற்கு 18000 ரூபாயும், 2 கிலோவாட்டிற்கு 30 ஆயிரம் ரூபாயும் 3 கிலோவாட்டிற்கு 78 ஆயிரம் ரூபாயும் மானியமாக கிடைக்கும். நீங்கள் 3 கிலோ வாட் அளவுள்ள சோலார் பேனலை அமைக்க விரும்பினால் உங்களுக்கு இரண்டு லட்சம் வரை செலவாகும். இந்த தொகையில் மத்திய அரசு ஆனது 78 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு மானியமாக வழங்கும்.
பி எம் சூர்யா கர் யோஜனா திட்டத்தை பெற தகுதிகள் என்ன?
- பி எம் கர் யோஜனா திட்டத்தின் மூலம் பலனடைய விரும்புவோர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரருக்கு மேற்கூறையுடன் கூடிய சொந்த வீடு இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் குடும்பத்தில் யாரும் அரசு பணியில் இருக்கக் கூடாது.
- விண்ணப்பதாரர் தன் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்து இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை
பி எம் கர் யோஜனா திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, கரண்ட் பில் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் பேங்க் புக், மொபைல் போன் ஆகியவற்றை கொண்டு இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.pmsuryaghar.gov.in செல்ல வேண்டும்.
- பின்னர் அதில் ரூப் டாப் சோலார் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
உங்களுக்கு ஒரு பேஜ் ஓபன் ஆகும். அதில் கேட்கப்பட்டுள்ள உங்களது விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். - அதன் பிறகு அப்லோட் செய்ய வேண்டிய டாக்குமெண்ட்ஸ் அனைத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- எல்லாம் முடிந்த பிறகு ஒரு முறை விவரங்களை சரிபார்த்து சப்மிட் பட்டனை கிளிக் செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
இவ்வாறாக பிஎம் சூரிய கர் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பித்த பிறகு அதிகாரி அவர்களால் நீங்கள் எந்த திட்டத்தின் பலனை பெற தகுதி உள்ளவர்களா என சரிபார்க்கப்படும். அப்படி நீங்கள் தகுதி உள்ளவர் என்றால் உங்களுக்கு ரூபாய் 78 ஆயிரம் வரையிலான மானிய தொகை உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டிற்கு அரசாங்கத்தினால் கிரெடிட் செய்யப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் சோலார் பேனலை நீங்கள் அமைத்தால் ஒரு வருடத்திற்கு ரூபாய் 30 ஆயிரம் வரை உங்களுடைய மின்சார செலவை நீங்கள் மிச்சம் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தையும் நீங்கள் அரசாங்கத்திற்கு விற்று ஒரு கணிசமான தொகையையும் பெறலாம்.
பிஎம் சூரிய கர் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க: Apply