தபால் அலுவலகத்தில் 5000 ரூபாயை 3.5 லட்ச ரூபாயாக மாற்றும் சூப்பரான முதலீட்டு திட்டம்! கட்டாயம் படிச்சு பாருங்க – Post Office RD Investment Scheme 2024

Post Office RD Investment Scheme 2024: மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானது பணமாகும். இந்த பணத்தை மக்கள் பல்வேறு வழிகளில் சேமித்து வைக்கின்றனர். இந்த பணத்தை இரட்டிப்பாக்குவதற்கு பல்வேறு முறைகளில் மக்கள் முதலீடும் செய்து வருகின்றனர். அதில் ஒரு முறை ஆனது அஞ்சலகத்தில் தொடர்ச்சியான வைப்பு முறையில் தொகையை முதலீடு செய்வதாகும்.

அஞ்சலகத்தில் தொடர்ச்சியான வைப்பு முறையில் தொகையை முதலீடு முறையானது ஆர் டி என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் மாதத் தவணையாக பணத்தை செலுத்தலாம். இது மக்களுக்கு பணத்தை சேமிப்பதற்கான பாதுகாப்பான ஒரு வழிமுறையாகும். மேலும் இம்முறைகளில் முதலீடு  செய்வதன் மூலம் ரூபாய் 5000 முதலீட்டை ரூபாய் 3 லட்சம் 50,000ஆக மாற்ற இயலும். இதனைப் பற்றி நாம் விரிவாக பார்க்கலாம்.

தொடர் வைப்பு கணக்கு RD திட்டம்:

மக்களுக்கு ஒரு உத்தரவாதமான வருமானம் தரும் முதலீட்டு திட்டம் தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு அல்லது தபால் அலுவலக RD திட்டமாகும். இதில் ஒருவர் மாதந்தோறும் டெபாசிட் செய்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையைப் பெறலாம். இத்திட்டத்தில் வருடாந்திர வட்டி 6.7 சதவீதம்  கிடைக்கும். மேலும் இத்திட்டத்தில் கடன் வசதியையும் வழங்குகிறது.

போஸ்ட் ஆஃபீஸ் RD ஆர்டி கணக்கை தொடக்கும் முறை:

ஒருவர் அஞ்சல் அலுவலக RD-யில்  தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். ஒரு மைனர் சார்பாகவோ அல்லது மனநிலை சரியில்லாத நபர் சார்பாகவோ அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் சார்பாகவோ ஒரு பாதுகாவலர் ஒரு கணக்கைத் தொடங்கலாம்.

குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச RD வைப்புத்தொகை

தபால் அலுவலகத் திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ஒரு மாதத்திற்கு ரூ. 100 அல்லது ரூ. 10 இன் மடங்குகளில் ஏதேனும் ஒரு தொகை. இருப்பினும், அதிகபட்ச வைப்புத்தொகைகளுக்கு வரம்பு இல்லை.

ரூ.5000 முதலீடு ரூ.3.57 லட்சமாக மற்றும் திட்டம்:

மக்கள் தொடர்ச்சியான வைப்பு முறை RD முதலீட்டு திட்டங்களை தபால் அலுவலகம் தவிர, பல வங்கிகள்  வழங்குகின்றன. இருப்பினும், தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் RD களின் வட்டி விகிதங்கள் வேறுபடலாம். ஒருவர் ரூ.5,000, ரூ.10,000, மற்றும் ரூ.15,000 என்ற அளவில் அஞ்சலக RD திட்டத்தில் முதலீடு செய்தால் முறையே ரூ.3.57 லட்சம், ரூ.7.14 லட்சம் மற்றும் ரூ.10.71 லட்சம் வரை பெறலாம்.

மக்கள் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் மொத்த வைப்புத்தொகை ரூ. 3,00,000 ஆகவும், பெறும் வட்டி ரூ. 56,830 ஆகவும், உங்கள் மொத்த முதிர்வுத் தொகை ரூ. 3,56,830 என்ற அளவிலும் இருக்கும். தபால் அலுவலகத் RD திட்ட முதலீடுகளுக்கு ஆண்டுதோறும் 6.7 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.

வேறு சில முதலீட்டு திட்டங்கள்:

ஐந்தாண்டுகளுக்கு மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், உங்களின் மொத்த வைப்புத்தொகை ரூ.6,00,000 ஆகவும், பெறும் வட்டி ரூ.1,13,659 ஆகவும், முதிர்வுத் தொகை ரூ.7,13,659 என்ற அளவிலும் இருக்கும். உங்கள் முதலீட்டுத் தொகையை மாதம் ரூ.15,000 ஆக உயர்த்தி, அதை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், உங்கள் மொத்த வைப்புத் தொகை ரூ.9,00,000 ஆகவும், வட்டித் தொகை ரூ.1,70,492 ஆகவும், முதிர்வுத் தொகை ரூ.10,70,492 என்ற அளவிலும் இருக்கும்.

Leave a Comment

Join Group!