Ration Goods Issue Announcement: தமிழகத்தில் ரேஷன் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு நாளுக்கு நாள் அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகிக் கொண்டே தான் இருக்கிறது. ரேஷன் கார்டின் மூலம் பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மானிய விலையில் பெற்று பயன் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு கோரி 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்கல் துறை இருந்து ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் 2.23 கோடி மக்கள்:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் 2.23 கோடி மக்கள் பயனடைகின்றனர். தமிழக ரேஷன் கடையின் மூலம் மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாயிலும், பாமாயில் எண்ணெய் ரூபாய் 25 ரூபாயிலும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
உணவுத்துறை அமைச்சர் மகிழ்ச்சி தகவல்:
ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெயை தராத மக்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த பொருட்களை பெறுவதற்கான தேவையான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு விட்டதாகவும் கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்த பொருட்கள் சரிவர ரேஷன் கடைகளுக்கு செல்லாத காரணத்தினால் மக்கள் இந்த பொருட்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனை சரி செய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த பொருட்கள் வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழகத்தில் இந்த பொருட்களை ஜூலை மாதத்தில் எந்தெந்த ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் வாங்கவில்லையோ அவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று, இந்த மாதத்தில் இந்த பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read Also This – இந்தியா போஸ்ட் நிறுவனத்தில் திறன் கைவினைஞர்கள் பணியிடங்களுக்கான வேலை! தேர்வர்களே விரைந்து விண்ணப்பிங்க