இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணிக்கான அருமையான அறிவிப்பு வெளியீடு! விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே

RBI Grade B Officer Recruitment 2024: மத்திய அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பணியிடங்களுக்கான  அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 16 என வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பணியிடங்களுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம், வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலி பணியிடங்களின் விவரங்கள்

ரிசர்வ் வங்கி 94 அதிகாரி கிரேடு பி பதவிகளுக்கு   தற்போது அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. ஆண், பெண் இருபாலருக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

RBI ரிசர்வ் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது OBC மற்றும் EWS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 850 ஆகவும், SC, ST மற்றும் PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகவும் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, 18% ஜி.எஸ்.டி. இணைத்து ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்க வயது விவரம்

RBI ரிசர்வ் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

RBI ரிசர்வ் வங்கி 94 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு கல்வித் தகுதி ஆகும்.

Also Read This – ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பல புதிய ரீசார்ஜ் திட்டங்கள்! சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் 

ஆர்பிஐ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்களது விண்ணப்பத்தினை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்
  • அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • அனைத்து தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள்

விண்ணப்பிக்கும் பணியின் அறிவிக்கை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 25 ஜூலை 2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16 ஆகஸ்ட் 2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply Here

Leave a Comment

Join Group!