School Leave Chance Aug 19:பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான் ஏற்கனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை விடப்பட்டது. அதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை பள்ளி வேலை செய்தது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது இந்நிலையில் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன அதன் காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்.

ஆவணி அவிட்டம் மற்றும் ரக்ஷா பந்தன் இரண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பூணூல் மாற்றும் சடங்கான ஆவணி அவிட்டம் பிராமணர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆவணி அவிட்டம்:
ஆவணி மாதம் வரும் அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் ஆவணி அவிட்டம் கடைபிடிக்கப்படுகிறது. ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு தான். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், சூரிய உதயத்திற்கு முன்பாக அதாவது அதிகாலையில் குளித்து நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இது பூணூல் மாற்றும் சடங்கு என்பது மட்டுமல்லாமல் ஆவணி அவிட்டத்திற்கு பல்வேறு முக்கியத்துவம் உள்ளன. உபகர்மா என்று கூறப்படும் இந்த நிகழ்வு பிராமணர் சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. இந்தாண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 19ம் தேதி திங்கள் கிழமை அன்று வருகிறது.
ரக்ஷா பந்தன்:
அதேபோல் ஆகஸ்ட் 19ம் தேதி அன்றைய தினம் ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவைக் கொண்டாடும் ஒரு இந்து பண்டிகையாகும். வடமாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில் இது ஒரு பொது விடுமுறையாக இருந்தாலும் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் இருந்தாலும் விடுமுறை இதுவரை விடுமுறை தொடர்பான எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள்:
இந்நிலையில், ஆகஸ்ட் 19ம் தேதி ஆவணி அவிட்டம் மற்றும் ரக்சா பந்தன் இரண்டும் ஒரே நாட்களில் வருவதால் விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர், பொறுத்திருந்து பார்ப்போம்.