இந்த தேதியில் தான் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது! கட்டாயம் பாருங்க

Tamil Pudhalvan Scheme Update 2024: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கிய ஆதாரமாகும். எனவே ஒவ்வொரு நாடும் தனது நாட்டில் உள்ள மக்களுக்கு கல்வி அளிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நமது மாநிலமான தமிழ்நாடு கல்வியில் மற்ற மாநிலங்களை விட சிறந்த எடுத்துக்காட்டாகவும் முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறது.

கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்கள்:

தமிழக அரசு கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை தீட்டி வருகிறது. அந்த வகையில் பள்ளி குழந்தைகளின் கல்விக்காக மதிய உணவு திட்டம் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு காலை உணவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இது அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

புதுமைப் பெண் திட்டம்:

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் மாறி தற்போது பெண்கள் படித்து பல துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர். பெண்கள் கல்லூரிக்கு படிப்பை திறம்பட மேற்கொள்ள நமது தமிழக அரசு புதுமைப் பெண் திட்டம் என்ற திட்டத்தின் மூலம் பெண்களின் கல்விக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும் அளவிலான பெண்கள் கல்லூரி படிப்பை திறம்பட மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் புதல்வன் திட்டம்:

தற்போது ஒரு படி மேலே சென்று தமிழக அரசானது உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்க உள்ளது. இதன் காரணமாக உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் படிப்பு மற்றும் இதர செலவுகளுக்காக ரூபாய் 1000 மாதம் தோறும் வழங்கப்பட உள்ளது. மாணவிகளுக்கு மட்டும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கும் இந்த தொகை வழங்கப்படுவதால் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் புதல்வன் திட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகள்:

தமிழ் புதன் திட்டம் மூலம் ரூபாய் ஆயிரம் மாதந்தோறும் எந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பதற்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசாங்கமானது வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளியில் 6 முதல்12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் தொகையானது மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரூபாய் ஆயிரம் மாணவர்களின் வங்கி கணக்குகளுக்கு எப்போது செலுத்தப்படும்:

தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் ரூபாய் ஆயிரம் மாணவர்களின் வங்கி கணக்குகளுக்கு எப்போது செலுத்தப்படும் என்று மாணவர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை தீர்க்கும் விதமாக முதல்வர் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கோவையில் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

அதனால் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி தமிழ் பொருள் எல்லாம் திட்டத்திற்கு தகுதி உள்ள மாணவர்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் இந்த தொகையானது வரவு வைக்கப்படும். எதற்காக தமிழக அரசானது 401 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மாணவர்கள் அனைவரும் இந்த தமிழ் புதல்வர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை பெற்று தங்களுடைய உயர்கல்வியில் சிறந்து மற்றும் தங்களுடைய வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

Leave a Comment

Join Group!