தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை! அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

TN Continuous Leave Bus Operate: இனிய வணக்கம் நண்பர்களே! நம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தொடர்ந்து அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கான காரணம் பொருளாதாரத்தில் நமது நிலையை மேலே கொண்டு வருவது. எனினும் நமக்கு ரிலாக்ஸ் செய்ய நேரம் தேவைப்படுகிறது. நாம் ஓய்வு செய்வதற்கு விடுமுறை நாட்களிலேயே பயன்படுத்துகிறோம்.

விடுமுறை:

நிறைய மக்கள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து வெளியூரில் வேலை செய்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்தைக் காண விடுமுறை நாட்களுக்கு சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

TN Continuous Leave Bus Operate
TN Continuous Leave Bus Operate

குறிப்பாக தொடர் விடுமுறை விடும் நேரத்தில் அவர்கள் பெரிதளவில் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்கின்றனர். அப்படிப்பட்ட தொடர் விடுமுறை நாட்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது அந்த வகையில் தொடர் விடுமுறை வரவுள்ளது. அதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் காண்போம்.

தமிழகத்தில் தொடர் விடுமுறை:

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிற்கு பொது விடுமுறை நாளாகும். இந்த ஆண்டு சுதந்திர தினமானது வியாழக்கிழமை வந்துள்ளது. அடுத்த நாளான வெள்ளிக்கிழமை வேலை நாளாகும்.

ஆகஸ்ட் 17 ,18 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். அதன் காரணமாக பெரும்பான்மையான கம்பெனிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் வெள்ளிக்கிழமையை விடுப்பு எடுத்துக்கொண்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இவ்வாறாக வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையை பெற்று தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர முடிவு செய்துள்ளனர்.

ஒரு சில தனியார் கம்பெனிகள் வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவித்து தொடர்ந்து நான்கு நாட்கள் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இந்தத் தொடர் விடுமுறை நாட்களை தமிழக அரசானது கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு சில முன்னேற்பாடுகளில் செய்துள்ளது.

தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை எடுத்து பணியாளர்கள் தங்களின் ஊருக்கு செல்வார்கள் என்பதால் புதன்கிழமை மாலை முதலே பல ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 14ஆம் தேதி அன்று 470 பேருந்துகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வெள்ளி, சனிக்கிழமைகளில் 365 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் புதன்கிழமை அன்று 70 சிறப்பு பேருந்துகள் பல ஊர்களுக்கு அனுப்பப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்ல உள்ளதால் கூட்ட நெரிசலில் அவர்கள் பாதிக்க கூடாது என்பதால் தமிழக அரசு தனது https://www.tnstc.in இணையதளத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தொடர் நான்கு நாட்கள் சுதந்திர தின விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களது டிக்கெட் புக் செய்து பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Leave a Comment

Join Group!