TN Gold Price Today: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீது அனைவருக்கும் பெரிய அளவிலான மோகம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் ஏழை முதல் பணம் உள்ளவர்கள் வரை தான் சேகரித்த பணத்தை வைத்து முதலாவதாக வாங்கக்கூடிய ஆபரணம் எதுவென்றால் அது தங்கம் ஆகும்.
தங்கம் முதல் சாய்ஸ்:
கல்யாணம் முதல் காதுகுத்து வரை அனைவரும் மற்றவர்களுக்கு பரிசளிக்க தங்கத்தையே முதல் சாய்ஸ் ஆக செலக்ட் செய்கின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை எப்பொழுதுமே ஏற்றத்துடன் காணப்படுகிறது. ஒருவர் தங்கத்தின் மீது முதலீடு செய்தால் எக்காரணம் கொண்டும் அவருக்கு நஷ்டம் ஏற்படாது. அதன் காரணமாகவே மக்கள் பணத்தை தங்கத்தின் மீது முதலில் செய்கின்றனர்.

தங்கத்தை ஆபரணமாகவோ காய்னாகவோ பத்திரமாகவோ வாங்க முடியும். மக்கள் இதில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி தங்கத்தை வாங்கி மகிழ்கின்றனர். இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றமும் இறக்குமுமாக காணப்படுகிறது. நாம் இந்த கட்டுரையில் இன்றைய தினமான ஆகஸ்ட் 11 தங்கத்தின் விலையை பற்றி ஆராய்ந்து பார்க்கலாம்.
இன்று ஆகஸ்ட் 11 தங்கத்தின் விலை:
இன்று ஆகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பானாலோர் ஷாப்பிங் செல்வார்கள். விடுமுறை தினமான இன்று நிறைய மக்கள் தங்கம் வாங்க நகைக்கடைக்கு செல்வர். அவர்களுக்கு இன்றைய தங்கத்தின் விலை தெரிந்திருக்க வேண்டும்.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ஆனது ரூபாய் 6445க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று 51 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய விலையை கம்பேர் செய்து பார்க்கும்போது எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்று என்ன விலையில் விற்கப்பட்டதோ அதே விலையில் தான் இன்றும் தங்கம் விற்கப்படுகிறது.
இன்று தூய தங்கத்தின் விலை:
இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 6900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கத்தின் விலை இன்று 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் விலை ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.
வெள்ளியின் இன்றைய விலை:
வெள்ளியின் விலையை பார்க்கும் போது என்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹88 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹88,000 ஆகும். எனவே தங்கம் மற்றும் வெள்ளி என்று வாங்குபவர்கள் இந்த விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்குங்கள்.