ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி! பயன்படுத்தி பாருங்க

TN Government Ration Card New App 2024: இன்றைய காலகட்டத்தில் ரேஷன் அட்டைகள் மூலம் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நியாயமான விலையில் வாங்கி பயன்படுகின்றனர். தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக பயன்படுகிறது.

ரேஷன் பொருட்களை முறைகேடாக பயன்படுத்துதல்:

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சிறப்பான திட்டங்களை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு துறை மூலமாக செய்து வருகிறது. எனினும் சிலர் ரேஷன் கடையும் மூலம் பெறப்படும் பொருட்களை முறைகேடாக கள்ள சந்தையில் விற்பனை செய்தும் வருகின்றனர். இதனை தடுக்க அரசாங்கம் பல வழிமுறைகளை கையாண்டு வருகிறது. அதனைப் பற்றி நாம் விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

அரசாங்க நடவடிக்கை:

ரேஷன் கடையில் விற்கப்படும் பொருட்களை கள்ள சந்தைகளில் விற்பவர்களை கண்காணிக்க அரசாங்கம் உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையை நியமித்து உள்ளது. இவர்கள் ரோந்து பணியை மேற்கொண்டு குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது 1955 பண்டங்கள் சட்டம் மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவ்வாறு குற்ற செயலில் ஈடுபவர்கள் மீது 1980 இன்றியமையா பண்டங்கள் வளங்கள் பராமரிப்பு சட்டம் மூலம் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து காவலிலும் வைக்கின்றனர்.

கள்ளச்சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:

மே மாதம் 01.05.2024 முதல் 31.05.2024 ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, பொது விநியோகத்திட்ட அரிசி 3995 குவிண்டால், 126 எரிவாயு உருளைகள், பொது விநியோகத்திட்ட மண்ணெண்ணெய்104 லிட்டர் , கோதுமை 305 கிலோ , 25 கிலோ துவரம்பருப்பு, 24750 லிட்டர் கலப்பட டீசல் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 175 வாகனங்களும் கைப்பற்றினர்.

குற்றச்செயலில் ஈடுபட்ட 1032 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980ன் கீழ் 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டிய எண்கள்:

இத்தகைய குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை பொதுமக்கள் கண்டறிந்து தங்களின் கைபேசி மூலம் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு இவ்வாறு குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் மீது புகார் அளிக்கலாம்.

தமிழக அரசு புதிய செயலி:

அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு TNePDS என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் தங்களது புகார்களையும் மற்றும் தங்கள் ரேஷன் கடைகளில் மூலம் பெற்ற பொருட்களின் விவரங்களையும் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். எனவே அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment

Join Group!