இன்னும் ஒரு வாரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது! உஷாரா இருங்க மக்களே

TN Rain News: தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நமது மாநிலத்திற்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை அதிக மழைப்பொழிவு ஏற்படும் ஆனால் தற்போது ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து நல்ல மழை தமிழகத்தில் பெய்து வருகிறது.

தமிழகத்தில் தற்பொழுது மழை பெய்ய காரணம் என்ன?

நமது அண்டை மாநிலமான கேரளாவில் பலத்த மழை பெய்து பல சேதத்தை ஏற்படுத்தியது நாம் பார்க்கிறோம். தற்போது தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்படுவது மரங்கள் சாய்வது மின்கம்பங்களில் பழுது ஏற்படுவது போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெறுகிறது.

TN Rain News
TN Rain News

இத்தகைய மழை பொழிவுக்கு காரணம் மேற்கு திசை காற்றின் வேறுபாடு என தெரிய வருகிறது. தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு நல்ல மழை பொழியும் என கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆறு மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது.

10.8.24 இன்றைய மழை விவரம்

இன்றைய தினம் தமிழகத்தில் லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இங்கு காற்றின் வேகம் மணிக்கு 30 லிருந்து 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என கூறப்படுகிறது.

11.8.24 மழை விவரம்

ஆகஸ்ட் 11ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். புதுவையிலும் இத்தகைய சூழ்நிலை ஏற்படும். காற்றின் வேகமானது 30 லிருந்து 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.

12.8.24 மழை விவரம்

தமிழகத்தில் பல பகுதிகளில் ஆகஸ்ட் 12ஆம் தேதி பலத்த மழை பெய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. காற்றின் வேகமானது 30 லிருந்து 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். கோயம்புத்தூர் நீலகிரி ஈரோடு சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அன்றைய தினம் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13.8.24 மழை விவரம்

ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெர்ணமல்லூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

14.8.24 மழை விவரம்

ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காற்றின் வேகமானது 30 லிருந்து 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.

எனவே எந்த ஒரு வார காலத்திற்கு மக்கள் கவனத்துடனும், பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும். நோய் தொற்றுகள் இந்த காலங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அனைவரும் தண்ணீரை சூடு படுத்தி குடிக்க வேண்டும். தேவை இல்லாமல் மழையில் மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும். ஈரத்தரையில் செருப்பு அணிந்து நடந்து செல்ல வேண்டும். இதன் மூலம் நாம் பாதுகாப்புடன் பணி செய்ய இயலும்.

Leave a Comment

Join Group!