Whatsapp New Update: அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே! இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் மனிதர்கள் நேரே சந்தித்து பேச காலம் இல்லை. அனைவரும் மொபைல் போனின் மூலமே தங்களுடைய தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
மொபைல் போனின் பயன்பாடு
முன்பெல்லாம் பேசுவதற்கு மட்டும் பயன்பட்ட மொபைல் போனானது இன்றோ சேட் செய்வதற்கு, வீடியோ கால் பேசுவதற்கு, தகவலை பரிமாறிக் கொள்வதற்கு என அனைத்து விதங்களிலும் பயன்படுகிறது. ஒரு காலத்தில் பைல் அல்லது டேட்டாக்களை அனுப்ப மக்கள் மெயில் பயன்படுத்தினர். இன்றோ மொபைல் போனில் உள்ள ஆப்களின் மூலம் எளிதாக அனுப்பி விடுகின்றோம்.

வாட்ஸ்அப்
உலகம் முழுவதும் தகவலை பரிமாறிக்கொள்ள பயன்படுத்துகின்ற முதன்மையான ஆப் Whatsapp ஆகும். குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ் அப்பின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. Whatsapp மூலமாக தகவல் அனுப்புவது, ஆடியோ கால் பேசுவது, வீடியோ கால் பேசுவது மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது போன்ற பலதரப்பட்ட விஷயங்களை நாம் செய்யலாம்.
வாட்ஸ் அப்பின் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருவதன் காரணமாக வாட்ஸப் ஆனது அதன் ஆப்பிள் பலதரப்பட்ட அப்டேட்களை கொண்டு வந்து தான் இருக்கிறது. தற்போது இந்த கட்டுரையில் புதிதாக வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள அப்டேட்களை பற்றி விரிவாக காணலாம்.
வாட்ஸ் அப்பின் Meta AI அப்டேட்
Whatsapp ஆனது Meta AI மெட்டா ஏ ஐ தொழில் நுட்பத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மெட்டா AIயிடம் தெரியப்படுத்தி அதற்கான சொலுஷனையும் கேட்டு பெறலாம். நீங்கள் டைப் செய்தோ அல்லது வாய்ஸ் அனுப்பியோ இந்த தகவலை பெற்றுக் கொள்ளலாம்.
டபுள் டேப் வசதி அப்டேட்
இன்ஸ்டாகிராமில் உள்ள DM டி எம் அம்சத்தை போல வாட்ஸ் அப்பிலும் ஒரு மெசேஜை இரண்டு முறை தட்டுவதன் மூலம் பதில் அளிக்கக்கூடிய புதிய அப்டேட் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்கு டபுள் டேப் அப்டேட் என WhatsApp பெயர் சூட்டி உள்ளது. ஒவ்வொரு மெசேஜுக்கும் நாம் சென்று ரிப்ளை தர வேண்டிய சூழல் இதற்கு முன் வாட்ஸ் அப்பில் இருந்தது. இனிமேல் அந்த மெசேஜ்க்கு விரைவாக நீங்கள் பதில் அளிக்க கூடிய வண்ணம் இந்த டபுள் டாப் வசதி அமைந்துள்ளது.
நீங்கள் உங்களுடைய நண்பர் அனுப்பிய மெசேஜ்க்கு பதில் அளிக்க விரும்பினால் அந்த மெசேஜை இரண்டு முறை தட்டுவதன் மூலம் அதில் ஹார்ட் எமோஜி திரையில் தோன்றும், அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹார்ட் எமோஜி தவிர மற்ற எமோஜிகளை பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பழைய முறையே பின்பற்ற வேண்டும்.
இந்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது. எந்த அப்டேட் பயனாளர்களுக்கு பயன்பாட்டில் வந்து விட்டால் வாட்ஸ் அப் மூலம் ரியாக்ட் செய்வது இன்னும் எளியதாகிவிடும்.