Jio New Prime Video Plan: வணக்கம் நண்பர்களே! நாளுக்கு நாள் புத்தம் புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொண்டு வந்து கொண்டே தான் இருக்கின்றனர். இதனை மக்கள் பயன்படுத்துகின்ற முறைக்கு தகுந்தவாறு ரீசார்ஜ் பிளான்களை செலக்ட் செய்து கொள்கின்றனர். சிலர் மொபைல் போன் மூலமாக ஆடியோ காலிங் வசதியை மட்டுமே பெற விரும்புகின்றனர். இன்னும் சில பேர் காலிங் மற்றும் டேட்டா வசதியை பெற விரும்புகின்றனர்.
அவர்களுக்கு தனி ரீசார்ஜ் பிளான்கள் உள்ளது. சிலர் இன்டர்நெட்டை மட்டும் பயன்படுத்த ரீசார்ஜ் பிளானை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களுக்கும் டேட்டா பிளான் ஆஃபர்கள் கிடைக்கிறது. மற்றும் சில பேர் மொபைல் மூலமாக கால் பேசுவதற்கும் டேட்டா யூஸ் செய்வதற்கும் மற்றும் ஆன்லைன் Appகளை பயன்படுத்துவதற்கும் பெரும்பாலும் ரீசார்ஜ் செய்கின்றனர்.

ஜியோ சிம்
ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ சிம் ஐ பயன்பாட்டிற்கு கொண்டுவந்த பிறகுதான் தொலைத் தொடர்பு துறையில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த வகையில் தற்போது உள்ள பெரும்பாலான மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் ரிலையன்ஸ் ஜியோ சிம் ஐஏ அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாக இந்தப் பதிவில் ஜியோ சிம் இன் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட முக்கிய பிளான்களைப் பற்றி பார்க்கலாம்.
ரூபாய் 1029 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டம்
ரூபாய் 1029 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது உங்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி உங்களுக்கு கிடைக்கும். அதிகமான அளவில் என்டர்டெயின்மென்ட் சம்பந்தமான விஷயங்களை பார்ப்பவர்களுக்கு எந்த வகையான பிளான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 84 நாட்களுக்கு பிரைம் வீடியோ காண்பதற்கான வசதி இந்த ரீசார்ஜ் பிளானில் கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு ஒரு நாட்களுக்கு இரண்டு ஜிபி அளவுள்ள இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி கிடைக்கும். அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பயன்படுத்தும் வசதி இந்த ரீசார்ஜ் பிளானில் கிடைக்கிறது.
ரூபாய் 1299 மதிப்பில்லான ரீசார் திட்டம்
ரூபாய் 1299 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த பிளான் ஆகும். இதன் மூலம் நீங்கள் 84 நாட்களுக்கு நெட்ப்ளிக்ஸ் மூலம் பிரைம் வீடியோக்களை பார்த்து மகிழலாம். இந்த ரீசார்ஜ் பிளானில் உங்களுக்கு 168 ஜிபி ஹை ஸ்பீட் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது. அது மட்டும் இல்லாமல் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்யும் வசதியும் இந்த பிளானின் மூலம் கிடைக்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு பிளான்களும் அதிகமான இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கும் மற்றும் Netflix, அமேசான் ப்ரைம் போன்ற ஆன்லைன் சந்தா ஆப்களை பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த பயன்களை கொடுக்கும். எனவே அதிகமான ஆன்லைன் Appகளை பயன்படுத்துபவர்கள் இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் சிறந்த நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும்.