Free Tailor Machine Apply: தமிழக அரசானது நாளுக்கு நாள் புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. இந்த திட்டங்களைப் பற்றி பத்தி எல்லாம் பேசப்பட்டு வருகிறது. பெண்களின் நலனுக்காக மாணவர்களின் நலனுக்காக விவசாயிகளின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு வகையான உதவித்தொகை திட்டம் வழங்கி வருகிறது. இந்த உதவி தொகை திட்டம் பல்வேறு வகையான மக்களுக்கு தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள பேருதவியாக உள்ளது.

தமிழக அரசி திட்டங்கள்:
தமிழக அரசினால் பெண்களுக்காக மகளிர் உரிமை தொகை திட்டம், பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம், மாணவர்கள் உயர்கல்விக்காக தமிழ் புதல்வன் திட்டம், அனைவரும் வேலை பெற நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு வகையான திட்டங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அந்த உதவித்தொகையைப் பெற்று தம் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் மாற்றுத்திறனாளி பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசானது தற்போது கையில் எடுத்துள்ளது. அதைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் விரிவாக காணலாம்.
தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய அவர்களுக்கு பயன்படும் வகையில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தமிழக அரசு தொடங்க உள்ளது. இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வரவேற்கப்படுகின்றது. இந்தத் தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை:
தென் சென்னை எல்லைக்கு உட்பட்ட 18 வயதிலிருந்து 60 வயது காது கேட்காத, கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் 75% மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தையல் இயந்திரங்களை பெறலாம் என்று தகவல் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கல்வி பயில்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற தகுதிகள் என்னென்ன?
- ஒரு மாற்றுத்திறனாளி காது கேட்காத, கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் 75% மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் இந்த மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.
- ஒரு மாற்றுத்திறனாளி டிகிரி முடித்து சுயதொழில் செய்து வந்தாலோ அவரும் அவரின் சர்டிபிகேட்டை வைத்து மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.
- 18 வயது முதல் 60 வயது பூர்த்தி அடைந்த மாற்றுத்திறனாளி இந்த மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.
- இந்த தையல் இயந்திரம் பெற அதிகபட்ச வயது வரம்பு 60 ஆகும்.
- அரசுத் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் இந்த ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
தையல் இயந்திரம் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இ சேவை மையத்தின் வாயிலாக ஸ்மார்ட்போன் தர விண்ணப்பிக்க வேண்டும். இ சேவை மையத்தில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள டாக்குமெண்டை அப்லோட் செய்து, விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும்.
இவ்வாறு தையல் இயந்திரம் பெற விண்ணப்பித்த மாற்று திறனாளிகளை நேர்காணல் தேர்வு நடத்தி அவர் தகுதியானவராக இருந்தால் அவருக்கு தையல் இயந்திரம் பெற அரசனது வழிவகை செய்யும். இவ்வாறு தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் 19.8.2024க்குள் தங்களது விண்ணப்பத்தை இ சேவை மையத்தின் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.