மகளிர் உரிமை தொகை: பயனாளிகளுக்கு இன்று! வெளியாகி உள்ள மகிழ்ச்சி தகவல்

Magalir Urimai Togai Today Credit: தமிழக அரசின் சிறப்பான திட்டங்கள் ஒன்று கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் மாதந்தோறும் ரூபாய் 1000 மகளிர் உரிமைத்துறையை பெறுகின்றனர்.

இந்த மகளிர் உரிமைத் தொகையின் மூலம் தங்கள் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். வருடத்திற்கு 12000 கிடைப்பது என்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான விஷயமாகும். இதன் காரணமாக மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்கள் தற்போது அந்த மகளிர் உரிமைத் தொகையை பெற மறு விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கு எப்போது மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

Magalir Urimai Togai Today Credit
Magalir Urimai Togai Today Credit

புதிய ரேஷன் அட்டைதாரர்கள்

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு சுமார் 2 லட்சம் மக்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்தல் காரணமாக இவர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்த இரண்டு மாத காலங்கள் ஆன நிலையில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி அரசு துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் தற்போது வழங்கப்பட்டு விட்டது.

இந்த ரேஷன் அட்டை பெற்றவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவராக இருந்தால் அவர்கள் மகளிர் உரிமைத் தொகையை பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் விரிவாக்கம் இன்னும் நான்கு மாதங்களுக்கு பிறகு செய்யப்படலாம் என செய்தி வந்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி புதிதாக திருமணமானவர்கள் ரேஷன் கார்டு பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேல்முறையீடு செய்தவர்களுக்கு எப்போது உரிமைத் தொகை

மகளிர் உரிமை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் சுமார் 1. 48 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். மகளிர் உரிமை திட்டத்தில் அரசு ஊழியரின் மனைவி முன்னாள் ராணுவத்தினர் மனைவி, அரசாங்கத்தால் உதவி பெறும் பெண்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. அவர்கள் மேல் முறையீடு செய்தாலும் அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

புதிதாக விண்ணப்பித்த மற்றும் மேல்முறையீடு செய்த பெண்களுக்கு சென்ற மாதம் ரூபாய் 1000 மகளிர் உரிமைத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. சிலருக்கு மட்டும் பணம் வர வைக்கப்படவில்லை. அவர்களுக்கு இந்த மாதம் பணம் வரவு வைக்கப்படலாம் என கூறப்படுகிறது

இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை

எந்த மாத மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 இன்று அனைத்து பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து இன்னும் கிடைக்காதவர்களுக்கு என்று மகளிர் உரிமைத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலாம் என மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

புதிதாக விண்ணப்பித்த ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் மேல்முறையீடு செய்து உங்களுடைய அப்ளிகேஷன் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகையானது இன்றைய தினம் வரவு வைக்கப்படலாம். எனவே புதிதாக விண்ணப்பித்தவர்கள் இன்று உங்கள் வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படுகிறதா என்பதை செக் செய்து பாருங்கள்.

Leave a Comment

Join Group!