Southern Railway Job Recruitment 2024: ரயில்வே துறையில் அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு, தெற்கு ரயில்வேயில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான 2438 பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 12 என வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ பணியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம், வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலி பணியிடங்களின் விவரங்கள்
தெற்கு ரயில்வேயில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான 2438 பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆண், பெண் இருபாலருக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாதம் ஊக்கத்தொகை; ரூ. 6000 – 7000 கிடைக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
தெற்கு ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது OBC மற்றும் EWS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் Rs.100, Women, SC, ST மற்றும் PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்க வயது விவரம்
தெற்கு ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 வயது முதல் 24 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையும் கூடுதலாகத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
தெற்கு ரயில்வே பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MLT பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை
அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
தெற்கு ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்களது விண்ணப்பத்தினை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
-
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
-
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்
-
- அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
-
- தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
-
- அனைத்து தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள்
விண்ணப்பிக்கும் பணியின் அறிவிக்கை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 30 ஜூலை 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12 ஆகஸ்ட் 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply